யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் தவமணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட எங்கள்
வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமியே எங்கள் அன்புத் தெய்வமே!
அம்மா? என்று குரல் எழுப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியவில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 18-05-2024 சனிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று பின்னர் வீட்டுக்கிருத்திய கிரியை 20-05-2024 திங்கட்கிழமை மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து, அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.