1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:09/05/2025
யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் தவமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஓடிமறைந்தாலும்,
மறையாது உங்கள் அன்புமுகம்
எம் நெஞ்சம் விட்டு
பாசத்தோடு எம்மை அரவணத்த தாயே,
ஏங்குகின்றோம் உம் பாசத்திற்காக.
துணையாய் இருந்து ஆறுதல் அளித்தீர்
கண்ணின் இமையாய் காத்து நின்றீர்
உயிரில் உணர்வாய் கலந்து இருந்தீர்
கண்கள் பனிக்க நெஞ்சம் தவிக்க
மறைந்து சென்றது ஏன்னம்மா?
நீங்கள் அன்புடன் பேசும் பேச்சு
உங்கள் இரக்கம் நிறைந்த உள்ளம்
கனிவான உங்கள் பார்வை
நீங்கள் எம்மோடிருக்கையில்
மகிழ்வாய் வாழ்ந்திருந்தோம்
இன்று தாலாட்ட நீங்கள் இல்லை
தவிக்கின்றோம் தாயே!
உங்கள் ஆன்மா இறைவனடியில்
அமைதியில் இளைப்பாற வேண்டுகிறோம்.!
தகவல்:
குடும்பத்தினர்