1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாமா சிவசங்கர்
அபிவிருத்தி உத்தியோகத்தர்- வலயக் கல்வி அலுவலகம், மருதனார் மடம்
வயது 47
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சுன்னாகம் ஸ்டேஷன் றோட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாமா சிவசங்கர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடம் ஒன்றாகிற்று இம்
மண்ணைவிட்டு நீ சென்று
நீ வென்ற மனங்களை விட்டு
சென்றிடத்தான் முடியுமோ
தூண்டில் மீனாய் துடிக்கின்றோமம்மா
மற்றவர் துயர்கண்டு துடிப்பவளே!
உந்தன் செல்வங்கள் கதறுகின்றனவே..
அணைக்க மறந்ததேன் அவர்களை
என்ன தவறு செய்தனர் இம்மண்ணில்
மரணிக்க வில்லையம்மா நீரிப்போ
மெளனமாய் உறங்குகிறீர் கண்மூடி
பிரிவென்று உமக்கில்லை மண்ணில்
பரிவோடு எம்பக்கம் இருக்கின்றீர்
இப்படிதான் எண்ணிக் கொள்வோம்
போகும் வழியில் நாமினையும் வரை!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
பாமா அக்கா உங்களுடைய ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். Bama Acca , we miss you. We lost our lovely acca. Ramesh &family