Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 JUN 1983
இறப்பு 04 APR 2019
அமரர் பாலேந்திரநாதன் சுபேஸ்
வயது 35
அமரர் பாலேந்திரநாதன் சுபேஸ் 1983 - 2019 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Milton Keynes ஜ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலேந்திரநாதன் சுபேஸ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பு மொழி பேசி!
ஆசையுடன் அருகமர்ந்த
அன்பு மகனே- நீ!

பிறந்த போது அடைந்த
மகிழ்ச்சியையும் தேடிய புகழ்ச்சியையும்
வாரிச் சுருட்டிக் கொண்டு
கூற்றுவனின் கரம் கோர்த்துச் சென்று
ஆண்டு இரண்டு ஆனதடா!

சீரான உன் வாழ்வதனை
சீரழித்த பாவியர்க்கு
ஜனனத்தின் பரிசாக- உன்
ஆயுளையும் சேர்த்து
நீடூழி வாழ்கவென்று
விலை மதிக்க முடியாத உன்
உயிரைக் கொடுத்தாயடா!

வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!

நீங்கா நினைவுகளுடன்
கண்ணீர் மல்க வேண்டி நிற்கிறோம்!
ஆண்டவன் பாதத்தில்
அமைதி கொள்வாய் அன்பு மகனே!

தகவல்: சித்தி-சித்தப்பா (லண்டன்)

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Sat, 11 May, 2019