அமரர் பாலேந்திரன் சுப்ரமணியம்:
Former administrative officer Ministry of Agriculture.
பிறப்பு: 24 JUL 1935
இறப்பு: 29 AUG 2021
பதுளை கப்புத்தளையைப் பிறப்பிடமாகவும், யாழ். துன்னாலை, கொழும்பு, வல்வெட்டி, கனடா Toronto, திருகோணமலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலேந்திரன் சுப்ரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்போடு எங்களை எல்லாம் அரவணைத்து
பாசத்தின் உயிராய் எம்முடன் வாழ்ந்து
எல்லோரையும் அழ விட்டு மறைந்த
எம் தெய்வமே! அப்பாவே!
ஓவ்வொரு விடிப்பொழுதும் நீங்கள்
எங்கே என்று எமது விழிகள் தேடுகிறது
உங்கள் நினைவுகளுடன் நாமெல்லாம்
ஒன்று சேர மனம் துடிக்குது மீண்டும்
ஒரு முறை எம்மை கட்டி அரவணைக்க
நீர் எழுந்து வாராயோ அப்பா!
கனவுகள் பல கண்டோம் எம்
அருகில் நீண்ட காலம் இருப்பீர்கள் என்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும் முன்பே
எம்மை விட்டு ஏன் சென்றீர்கள் அப்பா!!
இப்பொழுதும் உம் பாசத்திற்காக
ஏங்கி நாட்கள் எல்லாம் கண்ணீரில்
கரைந்தோட கலங்கித் தவிக்கின்றோம் அப்பா!!!
என்றென்றும் உங்கள் நினைவலைகள்
அழியாது எம்முடன் வாழும்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
----------------------------------------------------------------------------------------------------
அமரர் சறோஜினிதேவி பாலேந்திரன்:
பிறப்பு: 04 MAY 1943
இறப்பு: 24 JUL 2026
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை, கொழும்பு, வல்வெட்டி, கனடா Toronto, திருகோணமலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சறோஜினிதேவி பாலேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்பை அள்ளித் தந்தவரே அம்மா..!
அன்பை மட்டும் எங்களிடம் விட்டுவிட்டு
ஏன் அவசரமாய் பிரிந்தாயம்மா..?
பாசத்தைப் பொழிந்துவிட்டு
பண்பினை கற்றுத் தந்துவிட்டு,
உங்கள் அன்பின் பலனைப் பார்க்காமல்
ஏன் எங்களைத் தவிக்கவிட்டு சென்றாயம்மா..?
அம்மா… நீங்கள் எங்களைப் பிரிந்து
இன்றோடு முப்பத்தொன்று நாட்களாகிவிட்டதே..!
காலங்கள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவுகள் மட்டும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லையம்மா..!
அப்பாவின் பிறந்தநாள் வந்த அந்நாளிலே
எங்கள் வாழ்வின் பெரும் துயரமாய்
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாயம்மா..!
அம்மா உங்கள் பிரிவுச் செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல்
நாங்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றோம் அம்மா..!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
“I am so sorry to hear about your loss. My thoughts are with you.” Lalitha & Shri Toronto