2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுந்தரலிங்கம் மதனகுமார்
இலங்கை வங்கி உத்தியோகத்தர்
வயது 41
அமரர் பாலசுந்தரலிங்கம் மதனகுமார்
1982 -
2023
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை, தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரலிங்கம் மதனகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உனை இழந்து ஈராண்டுகள் ஆகியதோ
உதிரம் ஒருகணம் உறைந்தது! உன் இனிய நிளைவுகளால்
உள் மூச்சு வாங்கியது உன்வதனம் எம் நெஞ்சமதில் தோன்றியதால்!
உயிருள்ள வரை ஊசலாடும் எம் மனம்
உண்மை அன்பினால் உன்னைத் தேடி !
இதயமில்லா இறைவன் என்பதா !
இதுவே வாழ்வின் நியதி என ஏற்பதா !
இனிய மதனகுமாரே ! இன்று உன் நினைவு நாள்!
இறக்கவில்லை நீ!
இறப்பின் இரகசியம் சொன்ன
இறைவனாம் மாயவனின்
இன்னடியில் சுவர்க்க வாசல் ஏகாதசியில்
இரண்டறக் கலந்தாய் - எம்
இதய தெய்வமே மதனகுமாரே!
மார்கழித் திங்கள்
மதிநிறைந்த நன் நாளில்
மாறிலா அன்புடன்
என்றும் உன் நிளைவுடன் இணைந்திருப்போம்!
இரண்டாம் ஆண்டில் உன்
ஆத்மசாந்திக்காய் பிராத்திக்கும்
-குடும்பத்தினர்-
தகவல்:
மைத்துனர் திரு. திருமதி வரதராசா மன்மதி குடும்பத்தினர்- லண்டன்
தொடர்புகளுக்கு
சகோதரர்கள், சகோதரிகள் - உறவினர்
- Mobile : +94212263733