யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை, தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரலிங்கம் மதனகுமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
பசுபதீஸ்வரர் அருள்நிறை
பருத்தி நகரில் தேசத்தின் வங்கியாம் இலங்கை வங்கியில்
பாங்குடன் தொடங்கினாய் பயனுறு சேவையை
பாமர மக்களுக்கும் விளங்க வைத்தாய்
வங்கியின் சேவைதனை
பாரபட்சமற்ற சேவையால் பாராட்டுக்கள் பெற்றாய்
சாவகச்சேரியில் சான்றோரும் போற்ற
சளைக்காத சேவை செய்தாய்
சாந்தமுடன் தென்மராட்சியின் தென்றலாய் மிளிர்ந்தாய்
அச்சுவேலியில் அரும்பணி செய்து வங்கிக்காய் உழைத்தாய்
அறிவின் உச்சத்தைத் தொட்டு
அறிஞர் போற்ற பட்டமும் பெற்றாய்
அளித்தனர் உனக்கு அளவிலா பாராட்டை
கொடிகாமத்தில் கொடிகட்டிப் பறந்தாய் அனைவரும் போற்ற
கொழும்பில் இருந்து உன்னைத்தேடி வந்தது பதவியில் உயர்ச்சி
ஒட்டிசுட்டான் அழைத்தது உன்னை
ஓங்கிய வாஞ்சையுடன் அரும்பணியாற்றி
ஓர்மமாய் பணிபுரிந்து ஒன்றித்தாய் வங்கியுடன்
ஓரிருமாதமதில் ஓசை கொடுத்து அழைத்தானோ கண்ணன்
ஓய்வில்லாத உன் சேவை ஓய்ந்தது!
ஒன்றும் அறியாமல் தவித்தனர்
உடன்பணி செய்தோர்
ஒன்றித்தாய் வைகுண்ட ஏகாதசியில் இறைவனுடன்!
உன்னத சேவையை உயிர்ப்புடன் ஆற்றினாய் சமூகத்திற்காய்
உலகமுள்ள வரை இலங்கை வங்கியில்
உன்சேவை 'மைல்கல் ஆய் மிளிரும்!!!