யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சற்குணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் ஆருயிர் தாயே!
ஆண்டுகள் ஒன்று ஓடியதே
எங்களின் உயரிய ஒளிநிலவே
எமை நீங்கி மறைந்தீர்களே அம்மா!
நாட்கள் மட்டுமே நகர்கின்றது
விரல்கள் மீட்டாத வீணைபோல
உடல்களில் உயிர் அசைகின்றது
உயிர்பில்லாமல் அம்மா!
விழிநோக விடைதேடுகின்றோம் தாயே!
எங்களின் நிறைவான வரமே நீங்கள்தானே
உமை நீங்கி இனி ஏது நிறைவு காண்போம் அம்மா!
நீங்கள் சொல்லிய அன்பும் நீங்காத ஒழுக்கமும்,
நிலை குலையாத உறுதியும்
விலகாத நற்பண்பும் என்றும்
உம்மை போன்று
எம்மோடு இணைந்து வரும்
காலமெல்லாம்
உங்கள் கனவுகள்
எங்களின் உணர்வுகளாக
பரிணமிக்கும் தாயே!
எங்களின் பாதையின் முன்னே
உங்களின் ஆசியிருக்கவேண்டும் தாயே
உங்களது திருவடிகள் போற்றி
வணங்கி வாழ்ந்திடுவோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
My condolences to the family. May she rest in peace.