
அமரர் பாலசுப்ரமணியம் மகேந்திரன்
வயது 70

அமரர் பாலசுப்ரமணியம் மகேந்திரன்
1951 -
2021
தொண்டைமானாறு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இன்று காலை என்னுடைய மிகவும் நெருக்கமான பால்ய நண்பன் எங்களைவிட்டு பிரிந்து சன்னதிமுருகனின் காலடியில் இருக்க சென்று விட்டார் என்ற செய்தி என்னை உலுக்கி விட்டது. நானும் மகேந்திரனும், சிறுவயது முதலே உற்ற நண்பர்கள். ஒன்றாக படித்தோம்., சன்னதியானுக்கு ஒன்றாக பூத்தொண்டு செய்தோம். ஊரை விட்டு வெளியேறினாலும் தொடர்ந்து நல்ல நண்பர்களாகவே இருந்தோம். எத்தனையோ இனிமையான நினைவுகள். ஒரு மாதத்திற்கு முன்பு கதைக்கும் போது வழக்கமான கலகலப்பு இல்லை. இருந்தும் அது தான் கடைசி தடவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
நண்பனின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதுடன், அவரை இழந்து தவிக்கும் மனைவி, பிள்ளைகள், உறவினருக்கு, செல்வச் சந்நிதியான் ஆறுதலாகவும், பலமாகவும் இருக்க, வேண்டுகிறேன்.
சண்முகபாலா
அவுஸ்திரேலியா
Write Tribute