யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, சிலாபம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தொண்டைமானாறை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் மகேந்திரன் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி சபிண்டீகரன கிரியைகள் எதிர்வரும் 18-12-2021 சனிக்கிழமை அன்று காலை 05:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அஸ்தியானது தொண்டைமானாறு சின்னக்கடற்கரை புனித தீர்த்தத்தில் கலக்கப்படும் அதனைத் தொடர்ந்து அன்னாரது இல்லத்தில் நடைபெறும் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.