

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சிவனேஸ்வரி அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சசிகுமாரன், நந்தகுமாரன் மற்றும் புஸ்பவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, சிவயோகம், கனகாம்பிகை, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தயாரூபி(கனடா), தயாநிதி, தயாழினி(கனடா), பாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மோகேந்திரன், குலேந்திரன், சத்தியமூர்த்தி, விஜிந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றெஜிசன், அருணியா, நிறோசன், கஜீவன், மதுஷன், தேனுஷா, அஸ்வினி, அனுசியா, எந்துஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இளங்காட்டு மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click here