Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 24 OCT 1977
இறப்பு 14 NOV 2023
அமரர் பாலசுப்பிரமணியம் கிரிதரன்
Old Student of Jaffna Hindu College, Seneca College, and Laurentian university(B.Com)
வயது 46
அமரர் பாலசுப்பிரமணியம் கிரிதரன் 1977 - 2023 இருபாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கிரிதரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எமது அருமை உயர்திரு பாலசுப்பிரமணியம் கிரிதரன் அவர்களின் துயரச்செய்தி கேட்டு நாம் துன்புற்றிருந்த வேளைதனில் நேரில் வருகை தந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், முகநூல், மற்றும் RIPBOOK மூலமும் எமக்கு ஆறுதல் கூறியோருக்கும், அனுதாபச்செய்தி தெரிவித்தேருக்கும், மற்றும் கவிமாலை புனைந்தோர்க்கும், மலர்வளையம் சாத்தியோர்க்கும், மற்றும் உற்றார்,உறவினர், நண்பர்கள், மற்றும் உணவு தயாரித்தளித்த குடும்பத்தினர்க்கும், மற்றும் மரணச்சடங்கை ஒருங்கிணைத்த யாழ் இந்து பழைய மாணவர் சங்கம் (96 பிரிவு), மற்றும் சர்வதேசகிளை அன்புள்ளங்களுக்கும் அவர் நோயுற்ற செய்தி அறிந்து வருகை தந்து ஆறுதலளித்த கனடாவாழ் மற்றும் புலம்பெயர்வாழ் நல்லுள்ளங்களுக்கும், அத்துடன் இதமுடன் சேவையாற்றிய NorthYork Hospital வைத்தியர் குழாம் மற்றும் தாதியர்க்கும் மற்றும் அச்சகத்தார்க்கும் எமது குடும்பத்தினர் சார்பாக எம் சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31 ஆம் நாள் நினைவுக்கிரிகைகள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணியளவில் கனடா கந்தசாமி கோயில் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அச்சமயம் தாங்கள் தம் குடும்பம் சகிதம் வருகைதந்து அவரது ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
கனடா கந்தசாமி கோயில்,
733 Birchmount Road,
Scarborough M1K 1R5. 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.