4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 FEB 1936
இறப்பு 13 JAN 2018
அமரர் பாலசுப்பிரமணியம் கனகம்மா 1936 - 2018 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு குறிகட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich Dielsdorf ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் கனகம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நான்கு ஆண்டுகள் கடக்கிறது ஆனால்,
நான்கு நாட்கள் போல் தெரிகிறது உம் நினைவு!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - உங்கள்
உறவுக்கு நிகரில்லை யாருமே!

அம்மா உரிமைகொள்ள ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் உள்ளத்தை புரிந்து
கொள்ள எம் தாய் போல் எவரும்
இல்லை எம் அருகினில்..

நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது

காலங்கள் கடந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்முடன் என்றும் வாழ்ந்து கொண்டேயிருக்கும்!!
உங்கள் ஆத்மாவிற்காக நாங்கள் வணங்குகிறோம்!!

தகவல்: குடும்பத்தினர்