2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 FEB 1936
இறப்பு 13 JAN 2018
அமரர் பாலசுப்பிரமணியம் கனகம்மா 1936 - 2018 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு குறிகட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich Dielsdorf ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் கனகம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள அம்மா!
உங்களை நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது..

காலங்கள் பல கடந்தாலும் கண்மணிகள்
நாம் கலங்கி நிற்கின்றோம்
வாராயோ ஒருமுறைவரம்
ஏதும் தாரோயோ அம்மா...

உங்கள் வழி நடத்தல் இன்றி
உங்கள் குரல் கேட்காது
ஓவ்வொரு நொடிப் பொழுதும்
நாங்கள் ஏங்குகிறோம் அம்மா

உங்கள் அன்பும் பாசமும்
எங்களுக்கு வேண்டும் அம்மா
எங்கள் உள்ளம் ஏங்குகின்றது
வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றோம்
வந்து விடுங்கள் மீண்டும் எங்களிடம்...

கண்ணுக்குள் மணிபோல் இமைபோல்
காத்தோயே அம்மா...
உங்களை காலன் எனும் பெயரில்
வந்தகயவன் களவாடி சென்றதேனோ...
நீங்கள் விண்ணில் கலந்த நாள் முதல்
எங்கள் விழிகள் உங்களையே தேடுகின்றது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மக்கள், மருமக்கள்