யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Kelmis, ஜேர்மனி Aachen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் நாகேஸ்வரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத்தாயே அம்மா அம்மா.
நீங்கள் சென்று ஓராண்டு ஆகுதம்மா
உங்கள் இழப்பு எங்களை வாட்டி வதைக்குதம்மா.
அம்மா நீங்கள் ஓடோடி வந்து முன்னாடி நிற்ப்பீங்க
ஆதரவாய் எமக்கு இன்று அநாதையாய் நிற்கிறோம்
அம்மா, ஆண்டாயிரம் சென்றாலும் ஆறாதம்மா
எம் நெஞ்சம் நெஞ்சில் தீயாக நின்றெரியுதம்மா!
நினைவுகள் அலைகளாக வந்து வதைக்குதம்மா..
உங்கள் அன்புத் தங்கை இலங்கையில்
உங்கள் நினைவாக எங்கித் தவிக்கிறார்
பொய்யாக இருக்காதா என ஏங்குகிறோம்
அம்மா என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழ்கிறோம்
அம்மா உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல மாரியம்மாளை வேண்டி நிற்கிறோம்
அம்மா!
ஒம் சாந்தி ! சாந்தி ! சாந்தி !
உங்கள் பிரிவால் ஏங்கி வாடும்...
சகோதரி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்...