நம்ப முடியவில்லை தம்பி சதிஸ் உனது இழப்பை... சென்று வா ....தம்பி சதிஸ்! உன்னை இழந்து தவிக்கும் மனைவி அகிலா, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்வதோடு அந்த நாட்களில் எனது தந்தை, தாயாருடன் பழகிய நினைவுகளை நான் நினைத்துப் பார்க்கின்றேன் சதிஸ்! எமது வீட்டுக் கொண்டாட்டங்களிலும் சரி எமது வீட்டு துயரச் சம்பவங்களிலும் சரி தம்பி சதிஷின் வருகை நிச்சயம் இருந்திருக்கிறது. இன்று நீ இல்லாத இத்தருணத்தில் நான் நினைத்துப் பார்க்கின்றேன் சதிஸ்! ஊருக்கே நண்பன் நீ சதிஸ் ! எப்போதும் எங்கு கண்டாலும் புன் முறுவல் சிரிப்புடனும் கதைத்து விட்டு கடந்து செல்லும் இயல்பு நம்ப முடியவில்லை உங்கள் இழப்பை.... சென்று வாருங்கள்...தம்பி சதிஸ்! ஆறமுடியவில்லை உன் பிரிவால்! உன் ஆத்மா சாந்தியடையட்டும் சதிஸ்! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!!