12ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பாலசிங்கம் அன்னபூரணம்
1938 -
2013
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா கமில்ரனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் அன்னபூரணம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் 12 சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
அம்மா நாம் மறக்கவில்லை உம்மை
என்றும் நினைப்பதற்கு ஆறவில்லை
நெஞ்சம் அன்பின் ஈரம் காய்வதற்கு - என்றும்
எம் அருகில் இருக்கின்றாய் - அதனால்
ஏங்கவில்லை நாம் இனிக் காண்போமா
என்று கல்லறை வாழ்வில் நெடுங்காலம்
சென்றாலும் எங்கள் நெஞ்சறைக் கூட்டில்
அழியாத ஓவியம் அம்மா நீங்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிராபாகரன்(மகன்)- கனடா