Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 FEB 1938
இறப்பு 15 APR 2013
அமரர் பாலசிங்கம் அன்னபூரணம்
வயது 75
அமரர் பாலசிங்கம் அன்னபூரணம் 1938 - 2013 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா கமில்ரனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் அன்னபூரணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

உதிரத்தைப் பாலாக்கி ஊட்டியவள்!
உதிரமெல்லாம் பாசத்தை ஏந்தியவள் எம் தாய்!
தொட்டிலில் இட்ட அன்னையை
 பத்தாண்டு தாண்டியும் அழுகின்றோம்!

எல்லோர் மனதிலும்
 என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

ஆண்டுகள் பத்து அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
 வாட்டி வதைக்கின்றது அம்மா!

எம் வாழ்க்கையின் வேராய் வாழ்ந்தவள் நீ
வாழ்க்கையில் ஒப்பிடா வேறாய் விளங்குபவள் நீ
 உடலுக்குள் உயிர்வளர்த்த கடவுள் நீ
பத்துத்திங்கள் எம் சுமைதூக்கிய சுமைதாங்கியும் நீயம்மா!

ஆயிரம் ஆண்டுகள் அடுத்தடுத்து வந்தாலும்
 ஆழிசூழ் உலகில் அன்னை உன் நினைவு மங்கிடுமோ?
நீ தந்த பாசத்தை இவ்வுலகில் எமக்கினி யார் தருவார்?

உங்கள் ஆத்மா சாந்தியடைய அன்னையின் காலடியே
சொர்க்கம் என்ற உண்மையினை இதயத்தில் ஏற்றி
 நாளும் இறைவனை வேண்டுகின்றோம்! 

தகவல்: பிராபாகரன்(மகன்)- கனடா

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute