12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலகிருஷ்ணன் செல்வநாயகம்
(கண்ணன், பழைய மாணவன்- யாழ்/நெல்லியடி மத்திய ம.வி, பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவன்)
வயது 43
அமரர் பாலகிருஷ்ணன் செல்வநாயகம்
1971 -
2014
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வடமராட்சி குடத்தனை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் செல்வநாயகம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு நீ பிரிந்து
பன்னிரண்டு ஆண்டு சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே ஆனாலும்
உன் நினைவுகள் புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன் நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர் இவ்வுலகில்
நாம் வாழும் வரை வற்றிப் போகாது.
உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் !!
தகவல்:
குடும்பத்தினர்