Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 13 JUN 1971
விண்ணில் 06 NOV 2014
அமரர் பாலகிருஷ்ணன் செல்வநாயகம்
(கண்ணன், பழைய மாணவன்- யாழ்/நெல்லியடி மத்திய ம.வி, பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவன்)
வயது 43
அமரர் பாலகிருஷ்ணன் செல்வநாயகம் 1971 - 2014 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி குடத்தனை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் செல்வநாயகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

என்னருமைச் சகோதரனே!
அனைத்தும் உனதருகில் இருந்தும்
முடியாமல் போனது எப்படி!
விதியா? இறைவனின் சதியா?

எழுதிட வார்த்தை இல்லை
அழுதழுது ஓய்ந்தன கண்கள்!

மொட்டாகி பூவாகி காயாகி கனியாகும்
வேளையில் காத்திருந்து படைத்தவன்
பழி தீர்த்தானோ ?

அன்பான உன் பார்வையும் சிரிப்பும்
அளவான உன் பேச்சும் அளவிலா ஆற்றலும்
அன்புச் செல்வமே என்றும் நிதர்சனமாய்
எம் மனக் கண்முன்னே நிழலாடுகின்றதே!

நாங்களும் வாழ்கின்றோம் பாவிகளாய்
உன்னை நினைக்கையில் உள்ளமே அழுகின்றது
இதயமும் பதறுகின்றது எம் உறவே

ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
உன் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது.

என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices