யாழ். கட்டைவேலி கரவெட்டி பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு புலோலி பெருந்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் லலித் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த ஏன்?
எங்கே? பிரிந்து போனீர்கள்!
உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,
மதிப்புக்கள் எல்லாம்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் அப்பா
நாம் இந்த மண்ணில் வாழும் வரை
நம் இதயத் தோட்டத்தில் ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும்
உங்கள் நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 30.12.2022 வெள்ளிக்கிழமை அன்று
காலை 05:00 மணியளவில் கரவெட்டி நுணுவில் குளக்கட்டு விநாயகர் ஆலயத்தில் நடைபெற்று 31.12.2022 சனிக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் துன்னாலை அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
பெருந்தெரு, புலோலி தெற்கு,
புலோலி.