கற்பிப்பதற்கென்றே இறைவனால் வடிவமைக்கப்பட்ட ஆசான், மாணவர்களை காவர்ந்திழுத்து கடினமான கணித பாடத்தை இலகுவாக கற்பித்த துடிப்பான ஆசிரியர். புளியங்கூடல் சாயிராம், யாழ்ப்பாணம் எடிசன் அக்டமி ஊடாக பெரும் கல்வி சேவை செய்து வந்த கணித ஆசிரியர் BP. பாஸ்கரன் அவர்களின் இழப்பு மாணவ சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாததொன்றாகும். 1980 களில் புளியங்கூடலில் சாயிராம் என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை ஆரம்பித்து இன்று வரை யாழில் மிகவும் பிரபலமான ஆசிரியர் இவர். இலகுவாக கணித பாடத்தை கற்ப்பிக்கும் திறன் கொண்டவர் மட்டுமன்றி கல்வி நிறுவனத்தை சிறப்பாக நடாத்தும் ஆற்றலும் கொண்டவர். விதியின் கோலத்தை என்ன செய்வோம். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்களுடன் நாமும் துயரில் பங்குகொள்கின்றோம். அவரின் தூய ஆன்மா இறையுடன் சேர பிரார்திக்கின்றோம்.ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Missed your smiling face my friend. Remembered those days. May your soul rest in peace.