யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு உம்பிச்சிபிளேசை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசந்திரன் அருளம்மா அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தருமலிங்கம், குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசந்திரன்(உரிமையாளர்- J.M.D.R & Company, கொழும்பு), அவர்களின் அன்பு மனைவியும்,
மங்கையற்கரசி(கனடா), காலஞ்சென்ற குகநேசன்(கனடா), சிவகுமாரன்(கனடா), குமரகுருபரன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சடாட்சரன், சிவகுமாரி மற்றும் ஞானசேகரன்(J.M.D.R & Company, கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
டாக்டர் கோபாலகிருஷ்ணன்(கனடா), தாமரைச்செல்வி(கனடா), சித்ரகலா(கனடா), கவிதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிருபாநிதி மற்றும் நளாயினி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முருகேசபிள்ளை(கொழும்பு), காலஞ்சென்ற தருமலிங்கம், முத்துத்தம்பி மற்றும் தணிகாசலம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பராசக்தி, மல்லிகாதேவி(கனடா), காலஞ்சென்ற யோகராணி மற்றும் சசிமாலா(கனடா), காலஞ்சென்ற மனோன்மணி, மரகதம், மகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜனகன்,பாலசந்தர், பிரசாந்தி, அபிராமி, பிரபு, பிரசன்னா, பிரதாப், பிரதீப், ரக்ஷான், றொஷான், ஜனகா, சைத்தியா, தர்ஷன், அஸ்வினி, சாமினி, அருணிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரிகான், விகான், ஹீரா, ஹரீனா, பேர்சி கைலர், ப்ரியா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு 17-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.