யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பலாலி தெற்கு வசாவிளான், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சின்னத்தம்பி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்புக்கு வரைவிலக்கணம்
எது ஆழ்ந்த போது
கண்முன்னே அம்மாவின்
பாச நினைவுகள் தான்
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அம்மா!
நீர் சொர்க்கத்தின் வாசலிற்கு சென்றுவிட்டீர்
நாம் சோகத்தில் வாடிக் கிடக்கின்றோம்
எம் இமையோரம் வழியும் கண்ணீர்த் துளிகள்
எமக்குள் ஏக்கங்களாய் வலிக்கின்றது
நேசம் மரிக்கவில்லை நினைவுகள் கலையவில்லை!
கலையான உங்கள் முகமும்
கள்ளமில்லா புன்னகையும்
கனிவான உங்கள் பேச்சும் காண்பதெப்போ அம்மா...!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டுக்கிரியை 20-01-2024 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை 2 Blenheim RdNortholt UB5 4TN, UK எனும் முகவரியில் நடைபெற்று, பின்னர் பி.ப 01:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை St Andrews Church, 87 Malvern Ave, Harrow HA2 9ER, United Kingdom எனும் முகவரியில் மதிய போசணம் நடைபெறும்.