1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்ட பேபி பஞ்சாட்சரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:02-02-2026
அம்மா ஓர் ஆண்டு
கரைந்ததம்மா உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு
இன்னும் கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு
அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!
அன்று எங்கள் அழுகையின்
அர்த்தம் புரிந்த அகராதி
புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு
தவிக்கின்றோம் கேட்கவில்லையாம்மா!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உன்னை போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையம்மா இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்..!
தகவல்:
குடும்பத்தினர்