1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
1963 -
2020
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Otisheim ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றும் உன் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
ஆண்டொன்று ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன
அன்பான அப்பாவே உங்கள் மறைவால்- நாம்
வாடுவதை யார் எடுத்துரைப்பார்கள்..
உறுதுணையாய் நானிருக்க
உற்ற துணையாய் நீங்கள் இருக்க
யார் கண் பட்டதுவோ- என்னை
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர் அப்பா!!!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
அப்பா நாம் மறக்கவில்லை
உமை என்றும் நினைப்பதற்கு!
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்