
மீசாலை வீரசிங்கம் மத்தியகல்லூரியின் பழைய மாணவனான ஐயாத்துரை மோகனதாஸ் ( குஞ்சண்ணை) அவர்களின் அகலாமரணம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது . 2006/07 ம் ஆண்டுக்காலப்பகுதியில் புளியம்பொக்கனை - கரவெட்டித்திடல் பகுதியில் அன்னாரின், இல்லத்தில் மாலைவேளைகளில் அண்ணனோடு கூடிப்பேசுவது வழமை. மிக அருமையான மனிதர் . பழகுவதற்க்கு இனியவர். மற்றவர்களின் மனம் நோகதாவண்ணம் பேசுபவர் . இறை நம்பிக்கை கொண்டவர் . மிக நல்ல மனிதர் ஈனர்களால் கொலைசெய்யப்பட்டமை வருத்தமளிக்கிறது . இலங்கையின் சட்டத்துறை மற்றும் நீதித்துறை அதீக கவனம் கொண்டு , குற்றவாளிகளை இன்ங் கண்டு , சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். அருமையான மனிதரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும் உரித்தாகுக. ஆன்மா சொர்க்கத்தில் அமைதிபெற இறையருள் வேண்டிப பிரார்த்திக்கிறேன். ஒம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!?