
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கணை, மீசாலை தட்டான்குளம் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மோகனதாஸ் அவர்களின் 45ம் நாள் கண்ணீர் அஞ்சலியும், நன்றி நவிலலும்.
பெற்றவருக்கு நல் மகனாய்
சகோதரர்களுக்கு நல் உடன்பிறப்பாய்
தொட்ட துணைக்கு நல் கணவனாய்
விளைந்த குழந்தை கட்கு நல்தந்தையானாய்
உறவுகளுக்கு உதவும் உன்னத கரமே
ஆன்மிகத் தொண்டில் சிறந்த அன்பு “குஞ்சனே”
வாழ்வாய் நலமாய் என்று நாம் கனவுகண்டோம்
வீழ்வாய் ஈனர்களால் என்று எண்ணியதில்லை
தன் இனத்திற்காய் தம் உயிர் ஈகம் செய்தவர்
வாழ்ந்திட்ட புனித பூமியில்!!
தம் இனத்தையே தரங்கெட்டு காவுகொள்ளும்
கூலிக்கும்பலின் ஈனப்பசிக்கு இரையானீரே?
அமைதியான உன் அன்பு உள்ளத்தை
பலிகொண்டு பழிசுமந்த பகைவர் அறியார்!
அறம் கொண்ட உன் ஆன்மா சாந்திபெற
நீ அகம் கொண்ட தெய்வத்தை பிரார்த்திக்கின்றோம்...!!
அன்னாரின் அகாலமரணச்செய்திகேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல் மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள், பாதாதைகள் வெளியிட்டவர்களுக்கும், வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர், ஊழியர்களுக்கும் காவல்துறையினர், ஊடகநண்பர்களுக்கும் மற்றும் இன்றுவரை சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.நீ அகம் கொண்ட தெய்வத்தை பிரார்த்திக்கின்றோம்...!!