1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பிரான்ஸ் Malakoff ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆதித்தன் கருணாவேல் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-11-2024
பூத்த நினைவது வாடுமுன்னே
பூமியை விட்டு போனவனே
மகனே என அணைக்க முடியாத
சோகத்தால்- எம் மனம்
இருண்டு
போய் உள்ளதைய்யா.!
வாய் விட்டுச் சொல்லவும் வார்த்தையில்லை
மனம் விட்டுப் பேசவும் இன்று நீ இல்லை
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம்
எம் பிள்ளை
போன திசை எது என்று தெரியாது?
மொட்டாகி பூவாகி காயாகி
கனியாகும் வேளையில் காத்திருந்து
படைத்தவன் பழி தீர்த்தானோ?
எங்களை தவிக்க விட்டு நீர்
தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண வருவாயா
ஓர் கணமே?
பிறந்து விட்டோம்
இம்மண்ணில்
இறுதிவரை வாழ்வோம்
நீ விட்டுச் சென்ற
நீங்காத நினைவுகளோடு... !
என்றும் உம் பிரிவால் வாடும்
அன்பு குடும்பத்தினர்...
தகவல்:
கருணாவேல்(கருணா) சத்தியபாமா
He was the best Brother i could have.Thank you for everything i'm glad i had a part of my life with you.I just hope you're happy where you are now even tho we're not together.