3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் அதிஸ்டபாலன் நிமல்ராஜ்
1973 -
2022
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:02/07/2025
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அதிஸ்டபாலன் நிமல்ராஜ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்றாகியும் ஆறவில்லை
எங்கள் சோகம் அப்பா!
உங்களை இழந்து தவிக்கும் நாள் முதல்
என் விழிகளில் வழியும்
கண்ணீர்த்துளிகளின் வேதனைகள்
உங்களிற்கு புரிகின்றதா அப்பா!
மூன்று வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே
என் மனசு அழுவதை நீங்கள் உணர்வீர்கள்
உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள் அப்பா!
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
We are sorry for your loss. He will be missed.