Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 07 AUG 1973
மறைவு 05 JUL 2022
அமரர் அதிஸ்டபாலன் நிமல்ராஜ்
வயது 48
அமரர் அதிஸ்டபாலன் நிமல்ராஜ் 1973 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அதிஸ்டபாலன் நிமல்ராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 25-06-2023

என் அருமைக் கணவரே!
என்னையும் என் பிள்ளைகளையும் தவிக்கவிட்டு
 எங்கு சென்றாயோ!
வானடைந்து ஒருவருடம் ஆனாலும்
 உன் பிரிவுத்துயர் ஆறாது

எம் கண்ணீர் நிறைந்த கண்கள்
 உமைத்தேட எம்மனமோ
உங்கள் அன்புக்கும் நிழலுக்கும் ஏங்கித் தவிக்கிறதே!

அன்பின் அடையாளச் சின்னம்
 அரவணைப்பின் அழகு நிறை உதாரணம்
 அணுவளவும் கலப்படமில்லா ஆழ்ந்த அன்பு....... !!
 கடிந்து பேசாத கனிவு,
கவலை மறக்கச் செய்யும் பரிவு,
கண்ணின் இமை போன்ற காவல்,
 வார்த்தைகளில் வர்ணிக்க இயலாத வாஞ்சை......!!

வெற்றிகளை மட்டுமே எமதாக்கிய விவேகம்.!
 வாழ்க்கை முழுவதுமே எமக்கான அர்பணிப்பு...!
 அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை
'அப்பா' என்பதில் அடங்கி விட்டது.....!!!
 ஆம் அகிலமிதில் எல்லோருக்கும்
அமைவதில்லை இந்த உறவு
அருமையாக குறையேதுமில்லா
எம் மகிழ் வாழ்விற்கு குறை கூற இயலா
உந்தன் உழைப்பே விதை....!

கட்டாயம் காலம் உள்ளவரை
கடவுளுக்கு நன்றி சொல்வேன்..
கடுகளவும் குறையேதுமில்லா
உனை தந்தையாய் தந்ததற்கு... !!!!!
 மீண்டும் ஒரு ஜென்மத்தில் நீங்களே
 எம் அப்பாவாக வரனும் என்று
தினம் இறை துதி பாடும் பிள்ளைகள்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 08 Jul, 2022