மன்னார் உயிர்த்தராசன் குளத்தினைப் பிறப்பிடமாகவும், பெரிய கட்டைக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அதிரியாம்பிள்ளை றீற்றம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு போனாலும்!
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!
எம்மை ஆறாத் துயரத்தில் விட்டு போனதேனோ!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது..!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றோம் தாயே..
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தோம் தாயே..!
காலங்கள் மாறினாலும் கனவுகள்
சென்றாலும் உங்கள் கோலமுகமும்
உதட்டோரப் புன்னகையும் என்றும் மாறாது!
ஒரு உன்னதமான தெய்வம் நீ அம்மா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்களின் பாசத்திற்கு நாம் பட்ட
கடன் தீராதம்மா ஆனால் முழு
நினைவாக உயிர் எம்முடன்
தான் இருக்குதம்மா
துன்பம் துயரம் தெரியாமல் எம்மை
எல்லாம் ஆழாத்துயரில் ஆண்டுகள்
இரண்டு ஆனதம்மா
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட
இருந்தாலும் நம் உள்ளத்தின்
உள்ளே வளரும் உங்கள் உடல்
மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!