பழகுபவர்களுக்கு அன்பையும், நேசிப்பவர்களுக்கு பாசத்தையும் எளிமையாக வெளிப்படுத்துகிற தோற்றம் எங்களை எப்போதும் உங்களை திரும்பி பார்க்க வைக்கும், விரும்பி கேட்க வைக்கும், எனது சிறு வயதில் நத்தார் பண்டிகையின் போது இவர் வாங்கி தந்த ஆடைகள், அப்படியே இன்னும் நினைவுகளில் இருக்கிறது. வறுமையின் வெறுமைக்குள் ஊரில் வாழ்ந்த காலத்தில் . பொறுமையாக பேசி எங்களை உணர்வு பூர்வமாக ஆறுதல் தந்து உதவிய உயர்ந்த உள்ளங்களில் இவர் எங்களுக்கு முக்கியமானவர். இளமையிலும், முதுமையிலும் ஒரே விதமான பாசத்தை வெளிப்படுத்தி வாழ்ந்தவர். இவருடைய பிரிவு நிரந்தரமானாலும். . என்றென்றும் நீங்காத நினைவுகள், எப்போதும் எங்களோடு பயணிக்கும். இவரது ஆத்மா சாந்தியடைய , நாம் இறைவனை வேண்டுகின்றோம். இப்படிக்கு - கண்ணன் குடும்பத்தினர் (கனடா)
Our heartfelt condolences to the family. Please know that our hearts are with you during this incredibly difficult time. May the love and memories you shared bring you comfort, and may you find...