யாழ். மயிலிட்டி வீரமாணிக்கம் தேவன் துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு திருச்சி கே கே நகரை வசிப்பிடமாகவும் கொண்ட அசோகமலர் சற்குணநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே வாழும் அன்பு
தெய்வம் அன்னை!
ஆயிரம் உறவுகள்
உன்மீது அன்பாக இருந்தாலும்
அன்னையின் அன்புக்கும்
அவள் அரவணைப்பிற்கும்
எதுவும் ஈடாகாது!
தாய் மடியைக் காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில்
வேறெதுவும் இல்லை!
காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய் மட்டுமே!
அவளை என்றும் மனதில் சுமப்போம்
உன் நினைவுகளோடு கண்களில்
கண்ணீருடன் ஏங்கும் உன் அன்பு
மகனின் தவிப்பு!
அன்னாரின் மரணச்செய்திக்கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.