45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 17 APR 2016
இறப்பு 05 MAY 2021
செல்வன் அஸ்வின் சுரேஸ்குமார்
வயது 5
செல்வன் அஸ்வின் சுரேஸ்குமார் 2016 - 2021 Brampton, Canada Canada
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கனடா Brampton ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்வின் சுரேஸ்குமார் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நீ பிறந்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை- இன்று
காலனுடன் சென்று எங்களை
கலங்க வைத்தாயே!

உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!

கருவாகி உருவாகி சிசுவாகி
கனவையும் புயலையும் கவலையும்
கலைத்திட்ட எம் உயிருடன் கலந்த அஸ்வின்
கனவாகிவிட்டதே எம் நினைவெல்லாம்!

உன்னை பிரித்து விட்டு
எங்களை பிரிந்து சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு
நாங்கள் அழுகின்றோம்..

செல்வன் அஸ்வின் சுரேஸ்குமார் அவர்களின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 33 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்