1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
33
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கனடா Brampton ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அஸ்வின் சுரேஸ்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி..
மகனே.....!!!
உன் சிரிப்பு சத்தத்தையும்,
உஷ்ண மூச்சுக்காற்றையும்
உன்னதமான அன்பையும், உணர்கிறோம் இன்றும்
ஓராண்டு அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறவாது எங்கள் நெஞ்சம்
மலரின் உதிர்வும் மனிதனின் மறைவும்
உலகிற்கு புதிதல்ல - மகனே
உன் பிரிவு எங்களுக்கு அவ்வாறல்ல
உன்னை பிரித்து விட்டு
எங்களை பிரிந்து சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு
நாங்கள் அழுகின்றோம்....
பிரிவின் பின்னரும் - இன்னும் எங்கள் கண்களில்
இருந்துகொண்டு தான் இருகிறாய்
வடிந்தோடும் கண்ணீராக அல்ல - எங்கள்
கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய்...!!!
என்றும் உன் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்