![](https://cdn.lankasririp.com/memorial/notice/201933/e87d7895-1673-45ad-8781-296c779c01f1/21-6067dbfd95c63.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/201933/8c65e1aa-81bb-4d8c-86b4-b89ab7a65d3d/21-6061a0407d6a5-md.webp)
யாழ். ஆனைக்கோட்டை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பளை தம்பகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிர்வாதம் முத்து மரியநாயகம் அவர்கள் 02-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசிர்வாதம் முத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும்,
செளந்தரநாயகம், திரேஸ்மலர்(தேவி), அரசரத்தினம், காலஞ்சென்ற வசந்தகுமாரன், வசந்தலீலா(றமணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிலோமினா அவர்களின் அன்புச் சகோதரரும்,
யோகலட்சுமி, பெனடிற், மல்லிகாதேவி, கிருஷ்ணவேணி, றஞ்சித்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜயரூபன், காலஞ்சென்ற விஜயரூபி, காந்தரூபன், சசிகலா, அழகேஸ்வரி, ஸ்ரிபன், ஸ்ரெலா, சுதர்சன், சுகிர்தன், நிசாந்தன், கிருசிகா, ரூபிகா, பிரசாந், கஜீபன், துளசிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கார்த்திகா, காருசன், சாருசன், யனிக்சா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிஅஞ்சலி 03-06-2020 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்பகாமம் இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.