Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 MAR 1993
இறப்பு 11 NOV 2020
அமரர் அற்புதராஜா பானுஜன் 1993 - 2020 வன்னிவிளாங்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வன்னி விளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, வவுனியா, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அற்புதராஜா பானுஜன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 01-11-2021

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
உன் பிரிவு எம்மை உருக்குதைய்யா

பாசமுள்ள உடன்பிறப்பே
பார் புகழும் சகோதரனே!
நீ நடந்த பாதையெல்லாம்
எம் நினைவும் தொடர்கிறதே
பலமிழந்தோம் பரிதவிக்கின்றோம்
உன் இழப்பை எதிர் கொண்டு
ஓராண்டு தான் ஆகினதோ!!

உன் உடன் பிறப்புகளுக்கோ
உன்னை இன்றி யாருமில்லை
உரிமையாய் கேட்பதற்கோ உடன் பிறப்போ
இனி நீயும் இல்லை

உங்கள் பிரிவால் நாமனைவரும்
துயரக்கடலில் மூழ்கித் தவிக்கின்றோம்.

கண்ணுக்கு கண்ணான எம் சகோதரனின்
ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று
ஆண்டவரை வரம் வேண்டி நிற்கின்றோம்.

உன் முகம் பார்த்ததில்லை
உன்னுடன் பழகியதுமில்லை
உன்னுடன் பேசியதுமில்லை
ஆனாலும் நீ எம் மனதை கவர்ந்து கொண்டாய்

ஒர் தம்பியாக, உன் அக்காவின் வார்த்தைகளால் உனை பார்த்து பழகி பேசியதாய் ஒர் உணர்வு

27 வருடங்கள் இத்தரணியில் நீ வாழ்ந்தாய் ஆனாலும் நீ பட்ட துன்பங்கள் சொல்லிலடங்கா... இருந்தாலும் இத்தரணியில் உனை ஈன்றவர்கனுக்கும் உன் கூடப் பிறந்தவர்கனுக்கும் நீ மிகப் பெரிய பொக்கிஷமாகவே இருந்தாய், அந்த வகையில் நீ அளவற்ற பாக்கியசாலியே

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்றிருக்கும் அதில் துன்பமும் இன்பமும் கலந்திருக்கும் ஆனால் உனக்கு இறந்த காலம் நிகழ்காலம் இரண்டையும் கடந்து விட்டாய் இப்போது தான் உன் ஒளிமையாமான எதிர்காலத்தை நோக்கி பயணித்திருக்கிறாய் அதில் உனக்கு துன்பம் என்று எதுவுமிருக்காது குழந்தையே என்றும் உனக்கு நல்லதொரு வாழ்வு உனக்காகவே இருக்கும்..

ஒரு குழந்தையாகவே இத்தரணியில் வாழ்ந்தாய் பலரின் மனதில் குழந்தையாகவே வலம் வந்தாய் உன் பிரிவுச்செய்திகேட்டு பலர் கண்ணீர் சொரிந்தார்கள் சில தினங்களாக உன் நாமமே பலர் நாவில் உச்சரிக்கப்பட்டது நீ என்றும் உனை பெற்றவர்களுடனும் உடன் பிறந்தவர்களுடனும் அவர்களின் உள்ளம் எனும் கோவிலில் வாழ்ந்து கொண்டிருப்பாய்...

உன் ஆத்மா சாந்தியடையட்டும்...       

தகவல்: குடும்பத்தினர்