மரண அறிவித்தல்

Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்.கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவநாதன் ஜெயதாஸ் அவர்கள் 08-07-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து அருந்தவநாதன், செல்வராணி தம்பதிகளின அன்பு புதல்வரும், நவரட்ணம் பரமசிவம், புஸ்பமலர்(கல்வியங்காடு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவதர்ஷினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நஜீந், சஜீர்த்தன், சுஜீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருந்தவச்செல்வி(இலங்கை), அருட்செல்வி(லண்டன்), மஞ்சுளா(ஜேர்மனி), ரஞ்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அனபுச் சகோதரரும்,
சிவாஜினி(ஜேர்மனி), சிவமாலினி(இலங்கை), கபிலன்(ஜேர்மனி), துஸ்யந்தன்(இலங்கை), துஸ்யந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்