யாழ். ஈச்சமோட்டை கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சின்னகுட்டி தியாகராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-12-2025
எங்கள் அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்!
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
ஐயா நாம் மறக்கவில்லை
உமை என்றும் நினைப்பதற்கு!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!