யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை தாமரை வீதியை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் தர்மராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இம் மண்ணுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து கடந்த 06-07-2021 ஆம் விண்ணுலகு சென்றிட்ட எங்கள் இதய தெய்வம் அருணாசலம் தர்மராஜா அவர்களின் நினைவஞ்சலியும் அந்தியேட்டி கிரியையும் 05-08-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கும் அதே வேளையில் அதனைத் தொடர்ந்து நண்பகல் 12:30 மணியளவில் நடைபெற இருக்கும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
எம் குடும்பத் தலைவரின் மறைவுச் செய்தி கேட்டு ஓடோடி வந்து இறுதிக் கிரியைகளுக்கான சகல ஒழுங்குகள், ஒத்தாசைகள் வழங்கிய அன்புள்ளங்களுக்கும், தொலைபேசி, முகநூல் மற்றும் சமூகவலைத்தளங்கள் மூலமாகத் தொடர்பு கொண்டு துயர்பகிர்ந்து கொண்டோருக்கும், இறுதிக்கிரிகையில் கலந்து கொண்ட அனைவருக்கும், இன்னும் பல வழிகளிலும் உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
முகவரி:
22/6, தாமரை வீதி,
வண்ணார்பண்ணை மேற்கு,
யாழ்ப்பாணம்
எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்