நன்றி நவிலல்
பிறப்பு 05 FEB 1929
இறப்பு 17 APR 2021
திருமதி ஆறுமுகம் யோகாம்பிகை
வயது 92
திருமதி ஆறுமுகம் யோகாம்பிகை 1929 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் யோகாம்பிகை அவர்களின் நன்றி நவிலல்.

இதயப்பூர்வமான நன்றிகள்!

 கடந்த17-04-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்த எமது குடும்பத் தலைவி அருமை அம்மா உயிர்நீத்த செய்தி அறிந்து எமக்கு ஆறுதல் கூறியும் தேறுதல் அளித்த அனைவருக்கும், நேரில் வந்து பார்வை அஞ்சலி செய்தோருக்கும், மரணச் சடங்கின்போது நேரில் கலந்து கொண்டவர்களுக்கும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து மலர்வளையம் சாத்தியோருக்கும்,  செய்திகள் அனுப்பியோருக்கும்,  அவர் மரணித்த நாள் முதல் இன்றுவரை ஆகாரம் தந்து உபசரித்து மற்றும் பல விடயங்களிலும் தோளோடு தோளாக நின்று அம்மாவின் இறுதிக் கிரியைகளை அழகாய் அமைப்பதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

மிக முக்கியமாக நாம் இங்கே ஒருவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இருபத்தி ஒரு வருட காலமாக எமது அம்மாவை அன்புடனும் மரியாதையுடனும் மருமகன் என்ற அடைமொழியை நீக்கி சொந்தமகனுக்கும்  மேலாக பல பணிவிடைகள் செய்து அம்மாவின் கடைசி நிமிடங்கள் வரை பாசமாய் கண்காத்த(மருமகன்,சகலன்,கணவன்) வரதனுக்கு எங்கள் குடும்பம் சார்பாக இதயபூர்வமாக இரு கைகூப்பி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute