1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆறுமுகம் வேல்முருகு
ஓய்வுபெற்ற நில அளவையாளர்
வயது 84
Tribute
26
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புலோலி ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், தும்பளையை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வேல்முருகு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் சால்பும் அகத்திருத்தி
புன்னகை ஒளியை முகத்திருத்தி
எங்கள் அன்பு அப்பாவே - உங்கள்
இன் சொல்லால் எம்மை
ஆண்டீரே
உள்ளார் இல்லார் பேதம் இன்றி
கற்றோர் மற்றோர் என்றும் இன்றி
எங்கள் அன்பு அப்பாவே - எங்கள்
யாவருக்கும் இனியனாய் வாழ்ந்தீரே
துன்பம் கண்டு துவண்டதில்லை
சவால்கள் உம்மை சாய்த்ததில்லை
எங்கள் அன்பு அப்பாவே - உங்கள்
மாண்புக்கு ஈடு நீரே
ஆனீரே
அழுது இது தீராது
உம்மைப் பிரிந்த துயரம் அது ஆறாது
எங்கள் அன்பு அப்பாவே - எங்கள்
உள்ளத்தில் என்றும் நீர்
வாழ்வீரே
உங்கள் பிரிவால்
துயருறும்
குடும்பத்தினர்....!!!
தகவல்:
குடும்பத்தினர்