1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஆறுமுகம் சுதானந்தன்
அஞ்சல் உத்தியோகத்தர் - புளியம் பொக்கணை
வயது 48
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், கண்டாவளையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சுதானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள்!
உருவமாகி உணர்வுகளாகி பின்
அருவமாகி எம்முன் இன்னும் அழகாகி
இனி எண்ணங்களில் மட்டுமே என்றாகி
இன்றோடு ஓராண்டு!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்