![](https://cdn.lankasririp.com/memorial/notice/217906/894f0156-1c38-415d-bbbf-7dee3f7528bb/23-63cc21c175274.webp)
யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன், காரைநகர் களபூமி விளானை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சிற்றம்பலம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் இன்னும்
எம் நெஞ்சை விட்டு அகலவில்லை
எங்கள் உறவாக எங்கள் நினைவாக!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
காலமெல்லாம் வரைந்து வைத்த
ஓவியமாய் எம்முடனே வாழ்ந்திடுவாய்!
மீண்டு வருவாய் என வழி பார்த்திருந்தோம்
விண்மீன்களாய் தான் தெரிகின்றாய்
அன்புள்ளங்கொண்ட ஆருயிர் அப்பாவே!
அகரத்தில் எங்களுக்கு பெயர்சூட்டிக் கூப்பிட்டீங்கள்
இப்போ நீங்கள் இல்லாமல் நாங்கள்
காற்றில் அறுபட்ட பட்டமாய் தவிக்கின்றோம்!!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எம் நெஞ்சை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள்!
இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பாசமிகு உறவுகள்...