Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 SEP 1927
இறப்பு 26 OCT 2018
அமரர் ஆறுமுகம் சின்னம்மா
வயது 91
அமரர் ஆறுமுகம் சின்னம்மா 1927 - 2018 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அம்மா!!

எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனிய சொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!

ஓரு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அம்மா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!

உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!

என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...

தகவல்: குடும்பத்தினர்