Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 16 SEP 1934
இறப்பு 27 JUN 2026
திரு ஆறுமுகம் சீவரத்தினம் 1934 - 2026 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

சோளாவத்தை வேலணை வடக்கை வாழ்விடமாகவும், வேலணை மேற்கு, பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் , புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சீவரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள்
ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!

துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே
தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில்
துளி கூட துவழாமல் எம்மை
தூக்கி விட்ட தந்தையே!

வலியால் நெஞ்சம் தவிக்கையில்
ஒளியாய் உம் குரல் கேட்டால்
துளியாய் போய்விடும் எம் துயரம்!

அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம்
நீர் மறைந்து பத்து ஆண்டு ஆனாலும் உம்
நினைவுகள் எம்மை விட்டு அகலாது!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.