யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராமநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் குடும்பத் தலைவர் ஆறுமுகம் இராமநாதன் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து, இந்த கொரோனா நோய் பரவும் காலத்திலும் நேரிலே எம் இல்லத்திற்கு வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், முகநூல் வழியாகவும் துயர் பகிர்ந்த அன்புள்ளங்களிற்கும், இறுதி அஞ்சலி செலுத்தியும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு இறுதி யாத்திரை வரை உடனிருந்த அனைவருக்கும், மண்டபத்திற்கு மலர் அலங்காரம் செய்தவருக்கும், மலர்வளையங்கள் வைத்தோருக்கும், அஞ்சலிப் பிரசுரம் வெளியிட்டோருக்கும், இறுதி அஞ்சலி உரையாற்றியவர்கட்கும், அபரக்கிரியைகளை நடாத்தி வைத்த அந்தணப் பெருமக்களிற்கும், இன்றைய ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களுக்கும், எமக்கு எல்லா வழிகளிலும் உதவியும் ஆறுதலும் நல்கி எம் துயராற்றிய அனைவருக்கும், மலரிற்கு இரங்கற் செய்திகள் தந்தவர்கட்கும், இக்கணம் வரை துயரில் உடனிருந்த அன்பான இதயங்கள் அனைத்திற்கும் எமது நெஞ்சம் நிறைந்த நன்றி.