யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் புஸ்பவதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய்
பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும்
ஊட்டி
கண்களைப் போல்
எமைக்காத்து
கண்ணியமாய்
வாழவைத்த அன்புத்தாயே!
அன்புடனும் அளவற்ற பாசத்துடனும்
கண் இமைக்குள் வைத்து
வாழ வழிகாட்டிவிட்டு
எம்மை விட்டு பிரிந்தது ஏனோ?
கஷ்டங்கள் பல வந்தாலும்
கவசமாய் எங்களைக் காத்தது
உங்கள் பாசம் அம்மா......!!!...!!
எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும்
இந்த சுகம் இனிக் கிடைக்காதே..!
அம்மா நீங்கள் எங்களைப் பிரிந்தாலும்…..!
உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 17-11-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 06: 30 மணிவரை 90, Rue Emile Zola - 93120 LA COURNEUVE எனும் முகவரியில் நடைபெறும் அந்நிகழ்விலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கல்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
90, Rue Emile Zola - 93120 LA COURNEUVE
(Train: 1- Arret : Hotel de Ville/Bus : 249 Arret : Hotel de Ville)
RER B: LA COURNEUVE - AUBERVILLIERS- Sortie: Avenue Victor Hugo
We are sorry for your loss and pray for rest in peace....