யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், 10ம் கட்டை விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பசுபதி அவர்கள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமணி(பெற்றி) ஆருயிர்க் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சீதேவிப்பிள்ளை(தங்கம்) மற்றும் தில்லைநாயகி, சின்னம்மா, நித்தியபாக்கியம்(பிரான்ஸ்), தர்மரட்ணம்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணபதிப்பிள்ளை, குணேஸ்வரி, நடராசா, கேதாரநாதன். கமலாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,
தயாளன்(லண்டன்). காலஞ்சென்ற முகுந்தன் மற்றும் மோகனன்(அவுஸ்திரேலியா), சுகந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாஜினி(லண்டன்), குமுதினி(அவுஸ்திரேலியா), அகிலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷா, ஆருஷா, பாரிசாலன், சஸ்வின், கிஷான், யஸ்வி, யஷானி. சயிற்றன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விசுவமடு 12ம் கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
10ம் கட்டை,
விசுவமடு.
தொடர்புகளுக்கு
- Mobile : +94778130374
- Mobile : +61425197784
- Mobile : +447827672700
- Mobile : +447447448784
As the future Parents-in-law of Mr. Mageswaran Mathushan, the beloved nephew of late Mr. Aarumugam Pasupathi, we convey our deep condolences to the family members of the late Mr. Aarumugam...